பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 சேக்கிழார் தந்த செல்வம் தீண்டுவீர் ஆயின் எம்மைத் திருநீலகண்டம்’ '.' • ' . . - (பெ. பு-365) திருநீலகண்டத்தின் பெயரிலேயே தம் முழு உயிரையும் வைத்திருப்பவரும் இறைவனைவிடத் திருநீலகண்டத்தையே தம்மால் விரும்பப்படும் பொருளாகக் கொண்டவருமான திருநீலகண்டருக்கு அம்மையாரின், 'எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம் என்ற மூன்று சொற்களும் பெரிய இடியாகத் தலையில் இறங்கிவிட்டன. - இந்தச் சொற்கள் அவரை என்ன செய்தன என்பதைத் தெய்வச் சேக்கிழார் இதோ கூறுகிறார்: ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்டஆர்வம் பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி. "ஏதிலார் போல நோக்கி, எம்மை என்றதனால் மற்றை மாதரார் தமையும் என்தன் மனத்தினும் தீண்டேன்' என்றார். (பெ. பு-366) இப்பாடலின் முன்னிரண்டு அடிகள் - நீலகண்டரின் வாழ்க்கைக் குறிக்கோளும், இப்பொழுது நடந்த நிகழ்ச்சிகளும் மோதுகின்ற ஒரு நிலையை