பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை துறந்தார் . 321 உணர்த்துகின்றன. இறைவனுடைய திருவடிவின் பல்வேறு உறுப்புகளில் நீலகண்டமும் ஒன்றாகும். ஏனைய உறுப்புக்கள் அவ்உடலுடன் ஒட்டியவை. கண்டம் அல்லது கழுத்து நீலமான நிகழ்ச்சி இடையே வந்தது. ஆனாலும் அந்தக் கழுத்து நீலமான பிறகு நீலகண்டம்’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது. காரணம் என்னவெனின், அந் நஞ்சு இறைவனின் உள்ளே சென்றிருப்பின் அங்குத் தங்கியிருக்கும் பதினான்கு உலகங்களையும் அழித்திருக்கும். ஆதலால் அது கீழே இறங்கிச் செல்லாமல் கழுத்தளவிலேயே நிற்குமாறு செய்துவிட்டார். எனவே, நீலகண்டம் என்றால் பிறருடைய துன்பத்தைப் போக்குவதற்கு உரிய ஒர் அடையாளமாக, குறியீடாகக் (Symbol) கருதப்பட்டது. இவ்வளவு ஆழமான கருத்தை மனத்தில் கொண்டுதான் திருநீலகண்டர், இறைவனுடைய அப்பெயரிடத்து எல்லையில்லாத பக்தி கொண்டு இருந்தார். அப்பெயரினிடத்துத் தம் உயிரையே வைத்திருந்தார் ஆதலின், அம்மையார் திரு நீலகண்டம் ஆணை எம்மைத் தொடாதீர்' என்று கூறியவுடன் ஒரே வினாடியில் வேற்று மனிதராக மாறிவிடுகிறார். - - இறைவனுடைய பெயர்கள் உயிர்களைத் துன்பக் கடலிடையே தோணித் தொழில் பூண்டு கரை