பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 சேக்கிழார் தந்த செல்வம் ஏற்றுவன என்ற நாவரசர் பெருமானின் பாடலுக்கேற்ப அம்மையார் பயன்படுத்திய திருநீலகண்டம்' என்ற சொல், அவருடைய கணவராகிய வேட்கோவரை மிகப் பெரிய உயரத்திற்குத் தூக்கிவிட்டுவிட்டது. பேதியா ஆணை’ திருநீலகண்டம் என்ற ஆணையைப், பேதியா ஆணை’ என்று சேக்கிழார் சொல்வதன் காரணம் யாது? சற்று நிதானமாகவும் விரிவாகவும் சிந்திக்க வேண்டிய இடமாகும் இது. பேதியா ஆணை’ ೯೯p தொடர் வருகின்ற இரண்டடிகளையும் காண்டது நலம். ஆதியார் நீலகண்டத்து - அளவுதாம் கொண்ட ஆர்வம் பேதியா ஆணைகேட்ட பெரியவர் இப்பாடல் சிக்கலாக உள்ளது என்பது ஒருதலை எனவே, உரை எழுதிய பலரும் தங்கள் தங்கள் கருத்துக் கேற்ப எழுதிச்சென்றனர் என்பதையும் அறிதல் வேண்டும். இரண்டடிகட்கும் பின்வருமாறு: பொருள் செய்தல் ஒரளவு பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஆதியார்-எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கின்ற - - -- சிவபெருமானுடைய