பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை துறந்தார் . 323 நீலகண்டத்து-நீலகண்டத்தினிடத்து; தாம் கொண்ட ஆர்வம்-தாம் வைத்திருக்கின்ற ஆர்வத்தினது அளவு எத்தகையது என்பதை பேதியா ஆணை-பிரித்து, வேறுபடுத்திக் காட்டுகின்ற ஆணையை கேட்ட பெரியவர்-காதால் கேட்ட பெரியவர்; என்பதே இந்த இரண்டடி களுக்குரிய பொருத்தமான பொருளாகும். இவ்வாறு பொருள் சொல்வதற்குரிய காரணம் வருமாறு: பல சமயங்களில் ஒரு பொருளிடத்து ஒருவன் வைத்திருக்கின்ற பற்று, ஆசை, பக்தி என்பவற்றை அவனேகூட அறிந்துகொள்ள முடியாத நிலை இருக்கும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அடிமனத்தின் ஆழத்தில் உறங்கிக் கிடக்கும் இந்த உணர்வு எத்தகையது என்பதை அறியவேண்டு மானால், அதற்கொரு சோதனை வேண்டும். திருநீலகண்டரின் ஆழ்மனத்தில் நிறைந்து கிடந்த ஒன்று, இறைவனுடைய திருநீலகண்டத்தில் அவர் கொண்டிருந்த ஆர்வமே ஆகும். அந்த ஆர்வத்தின் அளவு எத்தகையது என்பதை அவரே அறிந்திருக்கவில்லை. இப்பொழுது ஆற்று வெள்ளம் போல், அவரது ஆழ்மனத்தில் அடங்கிக் கிடக்கின்ற பக்தி, அம்மையாரின் ஆணையைக் கேட்டவுடன் பொங்கி எழுகின்றது. அளவை வேறுபடுத்திக் காட்டுகின்ற ஆணை என்று தெய்வச் சேக்கிழார் கூறுவது எவ்வளவு பொருத்தமானது! இந்த ஆணை