பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை துறந்தார் . 325 சம்பவத்திற்கு ஒரு புராணம் பாடவேண்டுமா என்ற வினாத் தோன்றினால், அது நியாயமானதே ஆகும். இந்நிகழ்ச்சி எங்கும் நடைபெறுவ தாயினும், தமிழகத்தில் வாழும் ஒரு பெண், என்னைத் தொடாதே என்று கூறுவாளே தவிர, எம்மைத் தீண்டுவீராயின்’ என்று கூறும் மரபு இல்லை. அப்படியானால், அடக்கமே உருவான அப் பெண்ணின் வாயில் என்னை என்ற சொல்லுக்குப் பதிலாக 'எம்மை என்ற சொல் வந்தது ஒரு புதுமைதான். சாதாரண நிலையில் உள்ளவர்கள் இது ஏதோ வாய்த் தவறுதலாக என்னை என்பதற்குப் பதிலாக 'எம்மை என்று கூறிவிட்டார். ஆகவே, அதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்ற முறையில் தான் அனைவரும் பொருள் கொள்வர். அவ்வாறு , பொருள் கொள்வதிலும் தவறில்லை. ஏனென்றால், இதைக் கூறிய திருநீலகண்டரின் மனைவி தன்மைப் பன்மையாக இதனைக் கூறவில்லை. என்னைத் தொடதீர்! திருநீலகண்டம் ஆணை என்று கூறவந்தவர், 'எம்மை’ என்று கூறிவிட்டார். நிச்சயமாக உலகத்தில் உள்ள பெண்களையெல்லாம் தம்மோடு சேர்த்துக் கொண்டு, பெண்கள் ஒருவரையும் தொடாதீர்!’ என்ற ப்ொருளில்