பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 சேக்கிழார் தந்த செல்வம் அம்மையார் இதனைச் சொல்லவில்லை என்பது தெளிவு. அப்படியானால், பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி ஏதிலார் போல நோக்கி, - "எம்மை என்றதனால் மற்றை மாதாரார் தமையும் என்தன் மனத்தினும் தீண்டேன்' என்றார் என்று சேக்கிழார் பாடுவதன் நோக்கம் யாது? 'எம்மை’ என்ற சொல்லை, அம்மையார் வேண்டுமென்றோ தம் விருப்பத்தை வெளிப்படுத்தும் சொல் என்றோ கருதி, எம்மை என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அது வாய்தவறி வந்த வார்த்தைதான். எனினும், அந்த ஒரு வார்த்தை, திருநீலகண்டரின் வாழ்வில் ஒரு மாபெரும் மாற்றத்தைச் செய்ய ஏதுவாய் அமைந்துவிட்டது. ஒரு வினாடியில் பெரியவர் ஆனது - அம்மையாரின் கூற்றில் அமைந்திருந்த இந்தச் சொல்லைக்கேட்டவுடன் நிகழ்ந்தது யாது என்பதைச் சேக்கிழார் மிக அற்புதமாக விளக்குகிறார். சிவநேயச் செல்வராய், சிவனடியார்களிடம் அன்பு பூண்டவராய், திருநீலகண்டத்திடம் ஈடு இணையற்ற பக்தி கொண்டவராய்த் தில்லை மூதூரில் வாழ்ந்த வேட்கோவரான ஒரு சராசரி அடியார் ஒரே