பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 சேக்கிழார் தந்த செல்வம் காரணம் யாது? சரியோ, தவறோ அந்த எம்மை’ என்ற சொல் திருநீலகண்டம்’ என்ற சொல்லோடு சேர்ந்தல்லவா வந்துவிட்டது! சாதாரண காலத்தில் எம்மை என்ற சொல்லுக்கு இப்படிப் பொருள் கொள்ளவேண்டிய தேவையில்லை. இப்பொழுது திருநீலகண்டத்தோடு சேர்ந்துவந்தமையின், அச். சொல்லைக் காதில் கேட்டவுடனேயே தில்லை வேட்கோவர், திருநீலகண்டர் என்ற பெரியவராகி. விட்டார் என்கிறார் சேக்கிழார். ஆணை கேட்ட பெரியவர் என்று சேக்கிழார் பாடுவது அவருடைய பக்தியின் விளைவாக வந்ததா, அடியார்களைப் புகழ்ந்து சொல்ல வேண்டும் என்ற கருத்தில் வந்ததா என்று பார்த்தால், இல்லை என்பது விளங்கும். மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அறுவகைக் குற்றங்களிலிருந்து விடுதலையாவது கடினம். அதுவும், முற்றிலும் விடுதலை ஆவது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றாகும். இம்மாதிரி நிலையில் பொருள் வளம் மிக்க குடும்பத்தில் பிறந்த ஒருவர்-யாருடைய தயவுக்காகவும் தம் வழிகளை மாற்றிக் கொள்ளத் தேவையில்லாத ஒருவர் இந்த ஆறுவகைக் குற்றங்களிலும் மிக ஆழமானதான காமக் குற்றத்திலிருந்து விடுபடுகிறார் என்றால், அது ஈடுஇணையற்ற ஒரு நிகழ்ச்சி ஆகும். ஏதோ ஒரு குறிப்பிட்ட பெண்ணினிடத்து இம்மாதிரி மனம் கொண்டார் என்றால், ஒருவேளை