பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 23 இருந்து வழிபடும்பொழுது அப்பகுதி மாசுபடுதல் இயல்பே ஆகும். தரையில் உள்ள மாசைப் போக்க அலகிடுதல், மெழுகுதல் என்பவை செய்யப்பெற்றன. காற்றில் உள்ள மாசைப் போக்கவே சாம்பிராணி தூபம் இடுதல், குங்கிலியப் புகை உண்டாக்குதல் என்பவை நடைபெற்றன. இறைவனை வழி படுவதற்குச் சாம்பிராணித் துரபமும், குங்கிலியத் தூபமும் தேவையில்லை. ஆனால், இவற்றை அங்கே செய்யவேண்டும் என்று நம் முன்னோர் ஏன் வகுத்தனர் என்றால், பலர் கூடும் இடத்தில் காற்றில் பரவும் கிருமிகளை ஒழிக்க மிகச்சிறந்த கிருமி நாசினியாகச் சாம்பிராணிப் புகையும், குங்கிலியப் புகையும் பயன்படுத்தப்பட்டன. இறைவனுக்குச் செய்யும் தொண்டு என்ற பெயரில் மக்களுக்குச் செய்யும் தொண்டாகவே இவை விளங்கியதை நாம் அறியலாம். நந்தவனம் வைப்பதால் இன்று நாம் அதிகமாக விரும்பிக் கூறும் சுற்றுச் சூழ்நிலையைப் பாதுகாக்கும் மரம், செடி, கொடிகள் பயிராக்கப் பட்டன. இவை அனைத்துமே இறையன்போடு கூடிய மக்கட் தொண்டுதான். அறுபத்து மூவரும் ஏதோ ஒரு வகையான தொண்டில் ஈடுபட்டனர் என்பதைப் பெரிய புராணம் கூறுகிறது. இந்தத் தொண்டுகளில் பெரியது, சிறியது-உயர்ந்தது, தாழ்ந்தது-கடினமானது, எளிமை ஆனது என்றெல்லாம் ஆராய்வது அர்த்தமற்ற