பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை துறந்தார் . 329 அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், எம்மை’ என்றதனால், வேறு எந்த ஒரு பெண்ணையும் மனத்தினாலும் தீண்டேன் என்ற முடிவுக்கு ஒருவர் வருகிறார். இத்தகைய முடிவுக்கு அவர் வரக் காரணமாய் இருந்தது எம்மை என்ற ஒரு சொல்லே ஆகும். இந்த ஒரு சொல், ஒரு மனிதனை அறு வகைக் குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்து, உலகிடை அவரை வாழவைத்தது என்றால், இதற்குரிய பெருமை அச்சொல்லுக்கா? யாருக்கென்று சொல்வது. ஆழ்ந்து சிந்தித்தால் இதற்குரிய பெருமை முழுவதும் அந்த சொல்லைக் கேட்டவுடன், முழுத் துறவு பூண்ட திருநீலகண்டருக்கே பொருந்தும். ஆகையால்தான் சேக்கிழார், ஆணைகேட்ட பெரியவர் என்று சொல்கிறார். தனிச் சிறப்பான வைராக்கியம் இம்மாதிரி சூழ்நிலைகளில் பலருக்கு இத்தகைய வைராக்கியங்கள் தோன்றுவதுண்டு. அவற்றை மயான வைராக்கியம், பிரான வைராக்கியம், பிரசவ வைராக்கியம் என்று கூறுவர். அதாவது ஒரு சில வினாடிகள் தீவிர வைராக்கியமாக வெளிப்பட்டு, சில நாழிகைப் பொழுதில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகின்ற 'வைராக்கியங்களையே மேலே சொன்னவாறு குறிப்பிடுவர். திருநீலகண்டரின் வைராக்கியம் இரண்டு வகையில் ஈடு இணையின்றிச் சிறப்புற்று விளங்கியது. ஒன்று, மிக இளமையில்