பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 சேக்கிழார் தந்த செல்வம் தோன்றிய இந்த வைராக்கியம் அவர் முதுபெரும் கிழவராக ஆகின்றவரையில் நீடித்தது என்பது ஒரு சிறப்பு. ஒரு வேளை இந்த வைராக்கியத்தை மேற் கொண்டவுடன் அவர் மனித சஞ்சாரமே இல்லாத இமயமலை உச்சிக்குச் சென்று அங்கே வாழ்ந்து இருந்தால், வேறு வழியின்மையின், இந்த விரதம் சாத்தியமாகலாம். ஆனால், தில்லை வேட்கோவர் அழகிய இளம் மனைவியுடன் ஒரே வீட்டில் இருந்து கொண்டே இத்தகைய விரதத்தைக் கடைப்பிடித்தார் என்றால், அது உலக வரலாற்றில் வேறு எங்கும் காணப்படாத ஒரு சிறப்பாகும். கணவன், மனைவி இருவரும் என்ன காரணத்தாலோ இத்தகைய கடுமையான ஒரு விரதத்தை மேற்கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். வேறு யாரும் அவ்வீட்டில் அவருடன் வாழ்ந்ததாக வரலாறு குறிக்கவில்லை. அவ்வாறானல் இவருடைய விரதத்திற்குக் கேடு வராமல் பாது காக்க வெளியுதவி யாருமில்லை என்பது விளங்குகிறது. அவர்களுக்கு அவர்களே காவலாக அமைந்திருந்தனர் என்பது எல்லாவற்றையும்விடத் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறரிடம் பகிர்ந்துகொள்ள முடியாத இத்தகைய கடுமையான விரதங்கள் ஒருவரை மன இறுக்கம் காரணமாக நிலைகுலையச் செய்து விடும் என்பது இற்றைநாள் மனவியலார் கூறும்