பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை துறந்தார் 331 கருத்தாகும். ஆழ்மனத்தின் அடியில் வெளியில் சொல்ல முடியாத, பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியாத குற்ற உணர்வு இருக்குமேயானால், எத்தகைய வலுவுடைய மனிதனையும் அது நிலைகுலையச் செய்துவிடும். அப்படியானால் திருநீலகண்டரையும், அவருடைய மனவியையும் நிலைகுலையச் செய்யாமல் அமைதியான வாழ்க்கை பல்லாண்டுகள் வாழுமாறு செய்தது எது? அவர்கள் ஆழ்மனத்தில் குற்ற உணர்வாக இது படியவில்லை. அதனெதிராகத் தங்கள் வாழ்வு முன்னேறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய ஒரு படியாக இம்முயற்சியை மேற் கொண்டனர், ஆதலால், மன இறுக்கத்திற்கோ, அதன்வழியாக வரும் எந்த ஒரு நோய்க்கோ இங்கு இடமே இல்லை. பிறழ்ந்திருந்தால் இருபதாம் நூற்றாண்டில் மகாத்மா இந்தச் சோதனையை மேற்கொண்டார் என்பது உண்மை தான். ஆனால், அப்பெருமகனார் இச் சோதனையை மேற்கொள்ளும்பொழுது அவருக்குப் பிள்ளைகள் பிறந்துவிட்டனர். திருநீலகண்டரின் நிலை வேறு விதம். இத்தகைய ஒரு சோதனையில் விரும்பியோ விரும்பாமலோ அவர் தள்ளப்பட்டார் என்பது உண்மைதான். ஒருவர் விரும்பாமலே இத்தகைய சோதனையில் ஈடுபடமுடியுமா? திருநீலகண்டர்