பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 சேக்கிழார் தந்த செல்வம் “எம்மை என்ற சொல்லுக்கு இவ்வாறு பொருள் கொள்ளாமல் மனைவியைமட்டும் குறிக்கும் சொல்லாக அதனை நினைத்திருப்பின் யாரும் அவர்மேல் குறைகூற முடியாது. அன்றியும், யாருக்கும் தெரியாமல் தொடங்கப்பட்ட இம்முயற்சி இடையே தடைப்பட்டிருப்பினும், திருநீலகண்டரைக் குறைகூற யாரும் துணியமாட்டார்கள். விசுவாமித்திரன் கதையும், மச்சகந்தி பரிமளகந்தி ஆன கதையும், இந்தியா முழுவதும் அறியப்பட்ட கதைகள்தாமே! அப்படியிருக்கத் திருநீலகண்டர் தம் வைராக்கியத்தில் ஒரு முறை பிறழ்ந்திருந்தால், உலகம் மூழ்கிப் போயிராது. ஆனால், அப்பெருமகனார் அவ்வாறு செய்யாமைக்குக் காரணம் என்ன? மாதரைத் தீண்டாமையா, திருநீலகண்டப்பற்றா? மிக ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பகுதியாகும் இது. இறைவனுடைய அருள் துணை இல்லாமல், பொறி புலன்களை அடக்குதல் என்பது ஏறத்தாழ இயலாத காரியம். விசுவாமித்திரர் போன்றோர் தோல்விக்கு இதுவே காரணம் என்பதை அறிதல் வேண்டும். திருநீலகண்டரின் குறிக்கோள் எதுவாக இருந்தது? மாதரை மனத்தாலும் தீண்டாமல் இருக்கின்ற ஒரு விரதத்தை அவர் மேற்கொண்டாரா அல்லது தம் உயிரினும் மேலாக மதித்த திருநீல