பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை துறந்தார் 333 கண்டத்தின்மேல் ஆணையிடப்பட்டதால் அதனைப் பெரிதாக மதித்தாரா? ஆழ்ந்து சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும். அவரது தலையாய குறிக்கோள் நீலகண்டத்திடம் அவர் கொண்டிருந்த எல்லையற்ற ஈடுபாடே ஆகும். இதனைக் கூறவந்த சேக்கிழார், ஆதியார் நீலகண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம் என்று கூறுகிறார். அந்த அம்மையார், இந்தத் திருநீலகண்டத்தோடு சேர்த்து வேறு எதனைக் கூறியிருந்தாலும் அதனை உடனே வேட்கோவர் செய்திருப்பார். இரண்டுக்கும் ஆணிவேர் பொறிபுலன்களை வெல்வது கடினம். காமத்தை வெல்வது உயிர்களுக்கு இயலாத ஒன்று. இவை இரண்டையும் ஒருவர் ஒரே வினாடியில் மேற் கொண்டு, வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கிறார் என்றால், அந்த விரதத்திற்கு ஆணிவேர் எங்கோ இருத்தல் வேண்டும். அந்த ஆணிவேர்தான், நீல கண்டத்தின்மேல் வேட்கோவர் கொண்டிருந்த அளவில்லாத ஆர்வம் ஆகும். இதுகாறும் கூறிய வற்றை ஒரு கண்ணோட்டம் விட்டால் தில்லை வேட்கோவர் எவரும் செயற்கரிய மாபெரும் செயலைத் திருநீலகண்டத்தின்மேல் கொண்ட ஆர்வம் காரணமாகச் செய்துமுடித்தார் என்பதை அறியலாம். . - - .