பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 சேக்கிழார் தந்த செல்வம் தில்லைக் கூத்தன் பங்கு / பணி இந்நிகழ்ச்சி நிகழக் காரணமாக இருந்தது அவரது திருநீலகண்ட பக்தி அல்லவா? அப்படி ஒரு பக்தி இருந்தால், எதனையும்-எத்துணை இயலாத ஒன்றையும்-பொறி புலன்களை இந்த உலகில் வாழும் பொழுதே வென்று வாழமுடியும் என்பதை உலகத்தார்க்கு எடுத்துக் காட்டவேண்டிய கடமை தில்லைக் கூத்தனைச் சேர்ந்த தாகிவிட்டது. வேட்கோவர் தம் கடமையைச் செய்துமுடித்தார். தில்லைக் கூத்தன் தன் பணியைத் துவங்குகின்றான். கதை பலரும் அறிந்த ஒன்றாதலின், விரிவாகச் சொல்லத் தேவையில்லை. - வேதியர் வடிவுடன் வந்த கூத்தன் பழைய ஒடு ஒன்றை வேட்கோவரிடம் கொடுத்து, பொன்னினும், மணியினும் போற்றவேண்டுவது இது (பெ.பு-375) என்று கூறி, அந்தப் பழைய ஒட்டைப், பத்திரமாக வைத்துக் கொள் என்று கூறினார். ஒரு பழைய ஒட்டைக் கொடுத்துவிட்டு வந்த கிழவன், பொன்னினும், மணியினும் போற்றவேண்டுவது என்று கூறிய பொழுதே, திருநீலகண்டர் இதுபற்றிச் சந்தேகித்திருக்க வேண்டும். அப்பாவி ஆகிய அவர் இதுபற்றிச் சிந்திக்கவே இல்லை. "தந்து நில்’ - கிழவன் பல்லாண்டுகள் கழித்து நீலகண்டரிடம் வந்து நிற்கின்றான். பாவம், நீலகண்டர் பல்லாண்டுகள்