பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 சேக்கிழார் தந்த செல்வம் சொல்லும்பொழுது வேட்கோவர் கோபிக்கவே இல்லை. இரண்டாவது நிலை, ஒட்டைத் தேடி அது எங்கும் காணாமையால் கிழவனிடம் வேண்டிக் கொள்கின்ற நிலை. ஒடு காணாமல் போனது உண்மைதான். ஆனால், வசதிமிக்க வேட்கோவர் பாதுகாவலுடன் வைத்த ஓடு எப்படிக் காணாமல் போயிருக்க முடியும் என்ற ஐயம் இன்றும் நம் மனத்திடையே உள்ளது. வந்தவன் ஒரு படி மேலே சென்று, ஒட்டை நீ திருடிக் கொண்டாய். ஆகவே, உன்னை வளைத்து நீதிமுன் நிறுத்தி உன் திருட்டுத் தனத்தை வெளியிடப் போகிறேன்’ என்று ஒன்றன் பின் ஒன்றாய் இல்லாத பழிகளையெல்லாம் கிழவன் அடுக்குகிறான். இதற்குரிய காரணம் யாது? வாழ்நாள் முழுவதும் இறைத்தொண்டு செய் வதிலும் அடியார்க்கு வேண்டுவன செய்வதிலும் சிறப்பாகத் திருவோடு செய்வதிலும் ஈடு இணையற்று விளங்கிய வேட்கோவரிடம் வந்த கிழவன், இல்லாத பழிகள் இத்தனையைச் சுமத்துவதன் நோக்கம் யாது? ஆழ்ந்து சிந்தித்தால் இறைவனுடைய பரம கருனை இங்கே வெளிப்படுதலைக் காணலாம். பொறிகளை அடக்கி, மனத்தை ஒருமுகப்படுத்தி வாழ்தல் மிகப் பெரிய செயலாகும். இறையன்பு