பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை துறந்தார் , 337 காரணமாகத் தாம் ஒரு குறிக்கோளை மேற்கொண்டு பொறிபுலன்களை அடக்கி வாழ்தல் முன்னையதை விடச் சிறப்புடையதாகும். இளமை, இளமைக்குரிய பெருஞ்செல்வம், அழகுடைய மனைவி இத்தனையும் வைத்துக்கொண்டு, காடு முதலியவற்றிற்கு ஒடிச் செல்லாமல் இவற்றிடையே வாழ்ந்து காமத்தை வெல்லுதல் கற்பனைக்கு அடங்காத அற்புதமாகும். இவை அனைத்தையும் தில்லை வேட்கோவர் செய்து, திருநீலகண்டர் என்ற காரணப் பெயரையும் பெற்று விட்டார். அப்படியானால், களத்து நஞ்சு ஒளித்தவன், கிழவேதியனாய் எதிரே நின்று என் ஒட்டைத் திருடிக்கொண்டாய் என அடாப் பழி சுமத்தும்போதுகூட, நீலகண்டருக்குச் சினம் வரவில்லை. இந்தச் சூழ்நிலையில் திருநீலகண்டர் சினமடைந்திருந்தாலும் எதிரே நின்று அடாப் பழி கூறும் கிழவனை ஏசியிருந்தாலும் நையப்புடைத்து இருந்தாலும் அவர்மேல் யாரும் தவறு கூறார். அப்படியிருக்க, கிழவன் இத்தனை பழிகளைச் சுமத்தி உன் மகன் கையைப் பிடித்துக்கொண்டு குளத்தில் மூழ்கு என்று கூறுகிறான். வேட்கோவர், அவ்வாறு செய்யப் பொய்யில் சீர்ப் புதல்வன் இல்லை என்று கூறவும், அந்த வார்த்தைக்காகக் காத்திருந்தவன் போலக் கிழவன், உன் மனைவியின் கையைப் பற்றி மூழ்குவாயாக’ என்ற அளவுக்குத்