பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சேக்கிழார் தந்த செல்வம் செயலாகும். தொண்டு என்று வந்துவிட்டால் அதில் சிறியதுமில்லை, பெரியது மில்லை. "அக்கினிக் குஞ்சு ஒன்று கண்டேன், அதனை அங்கொரு பொந்திடை வைத்தேன்' என்று பாரதி பாடியது இங்கு நினைவு கூரத் தக்கது. . . . . ஒரு சில வரலாறுகளில் தொண்டு என்பது வெளிப்படையாகக் காணப்படாமல், குறிக்கோள் மட்டுமே o காணப்படும். t மனக்கோயில் கட்டிய பூசலார், கல்லால் எறிந்த சாக்கியர் சூதாடியே பிறர்க்கு உணவளித்த சூதர் என்பவர்கள் ஏதோ ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு. அதனை நிறை வேற்றத் தம் வாழ்நாளைச் செலவழித்தனர். யாருக்குத் தொண்டு? பெரியபுராணத்தில் வரும் வரலாறுகளில் ஏறத்தாழ நாற்பது வரலாறுகளில் சோறு போட்டுப் பசி நீக்கிய செய்தி பேசப்பெறும். மக்கள் தொண்டுகளில் சிறந்தது பசிப்பிணி போக்குதலே என்பதனைப் பலரும் ஒப்புக் கொள்வர். பெரியபுராணத்தில் வரும் வரலாறுகளை மேம்போக்காகக் கற்கிறவர்கள் சோறு இட்டவர்கள் வரலாறுகள் அனைத்திலும் பொதுவான ஒன்றைக் காண்முடியும். : சிவனடியார்க்குச் சோறிட்டார்கள் என்று கூறப்பட்டிருத்தலைக் கண்டவுடன் இந்தத்