பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை துறந்தார் , 339 இதை விளக்க, இதுவரை கண்ட இரண்டு வரலாறுகளை எடுத்துக்கொள்வது நலம் பயக்கும். வென்ற ஐம்புலனால் மிக்கீர்’என்று இறைவனலேயே விளிக்கப்படும் பெருமை வாய்ந்தவர் திருநீலகண்டர். காமத்தை வென்று மனைவியோடு பல்லாண்டுகள் வாழ்ந்துவிட்ட அவரது ஆழ்மனத்தில் எங்கோ ஒரு மூலையில் தாம் மேற்கொண்ட பணியில் பெற்ற வெற்றி காரணமாக ஒரளவு அகந்தை தோன்றி இருக்கலாம். அதை எந்த அளவு வேட்கோவர் போக்கியுள்ளார் என்பதைக் காட்டத்தான் கிழவன், இல்லாத பழியையெல்லாம் சுமத்தி, இறுதியாகக் அப் பெருமான் வாழ்நாள் முழுவதும் மறைவாக காத்து வைத்திருந்த சபதத்தை உலகறியக் கூறுமாறு செய்து விட்டான். - - வேட்கோவர் உள்ளத்தில் கடுகளவாவது அகந்தை இருந்திருப்பின், கிழவர் சுமத்திய பழிகளைக் கண்டு சினம் பிறிட்டுக்கொண்டு வந்திருக்கும். எந்த நிலையிலும் திருநீலகண்டர் மனத்தில் சினம் தோன்றவே இல்லை என்றால், ஐம்பொறிகளை வென்றதோடுமட்டு மல்லாமல் அந்தக்கரணங்கள் நான்கையும் வென்றுவிட்ட தனிப்பெருந் தலைவராக அவர் விளங்குவதைக் காணலாம். ஒற்றுமையுடைய வரலாறுகள் மூன்று சிறுத்தொண்டருக்கும் இப்படி ஒரு சூழ் நிலையை இறைவன் உண்டாக்குவதை காணலாம். சிறுத்