பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 சேக்கிழார் தந்த செல்வம் தொண்டர், திருநீலகண்டர், ஏயர்கோன்கலிக்காமர் ஆகிய மூவருடைய வரலாறுகளும் ஒரு விதத்தில் ஒற்றுமை உடையவை. திருநீலகண்டர், சிறுத் தொண்டர் ஆகிய இருவரும் செயற்கருஞ் செயல்கள் செய்தார்கள் என்பதைப் பலரும் அறிவர், ஏயர் கோனுடைய வரலாறு பலரும் அறியாத ஒன்றாகும். சுந்தரர் இறைவனிடம் அதிக உரிமை பாராட்டினார், அந்த உரிமை காரணமாக அவர் பல தவறுகளைச் செய்தார் என்று நம்பிய ஏயர்கோன் அவரைக் கண்ணால் பார்ப்பதும் பாவம் என்ற முடிவுடன் இருந்தார். அவருக்குச், சூலைநோயைக் கொடுத்த இறைவன் ‘சுந்தரர் வந்தால்தான் அச்சூலை நோய் தீரும்’ என்று கனவிடைக் கூறினார். சீறி எழுந்த ஏயர்கோன் "ஐயனே! உமக்குப் பரம்பரையாக அடிமை செய்யும் எங்களுக்கு ஒரு தீமை வந்தால் அதைப் போக்குவது உம்முடைய கடமை ஆகும். அதை விட்டுவிட்டு நீரே விரும்பிப் போய் ஓர் அடியானைப் பிடித்து அவனைத் தோழனாகவும் கொண்டீர். ஆனால், அவன் வந்து என்னுடைய சூலையைப் போக்குவதைவிட நான் இதனோடு இறப்பதே மேல், பெற்றம் உயர்த்த பெருமானே! தாங்கள் போய் வரலாம்” என்று இறைவனிடமே கூறும் நெஞ்சுரம் கொண்டவர். இந்த மூவரும் தங்கள் குறிக்கோளை உயிரினும் மேம்பட்டதாகக் காத்தனர். அவ்வாறு செய்யும்