பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை துறந்தார் : 341 பொழுது அவர்களையும் அறியாமல் அகந்தைக் கிழங்கு துளிர் விட்டால் அதில் தவறு ஒன்றும் இல்லை. என்றாலும், அதன் விளைவாக அத் தொண்டர்கட்கு இன்னும் ஒரு பிறவி வராமல் காக்க இறைவன் இவ்வாறு செய்கின்ற நான், இறைவன் மேற்கொள்ளும் இச்செயல் சோதனை அன்று. அடியார்கள் சாதனை புரிய இறைவன் சில வழிகளை வகுத்துக் கொடுப்பதே இங்கு நாம் காணும் நிகழ்ச்சிகள். இதுபற்றிப் பின்னர் ஓரளவு விரிவாகக் காணலாம். "திருநீலகண்டம்' என்று ஜெபித்தவர் யார்? தெய்வச் சேக்கிழார் பாடிய திருநீலகண்டர் புராணத்தில் இன்றுவரை பலரை மயக்கும் பாடல்கள் இரண்டு உண்டு. அவை, அவர் தங்கண் மனைவி யாரும் அருந்ததிக் கற்பின் மிக்கார்; புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம்செய் தவம் நின்று தடுத்தது என்னத் தகைந்து தான் தரித்தது என்று சிவன் எந்தை கண்ட தன்னைத் 'திரு நீல கண்டம்' என்பார். - (பெ. பு-363) ஆனதம் கேள்வர் அங்குஓர் பரத்தைபால் அணைந்து நண்ண