பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 சேக்கிழார் தந்த செல்வம் மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்தேன்.அலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார். (பெ. பு-364) இவற்றுள் முதலில் உள்ள அவர் தங்கண் என்ற பாடலுக்குச் சரியாகப் பொருள் செய்யாமல், திருநீல கண்டம் என்பார் என்ற அடிக்கு அருந்ததிக் கற்பின் மிக்கார்’ என்ற பெயரையே எழுவாயாக ஆக்கி, அந்த அம்மையார் தாம் திருநீலகண்டத்திடம் எல்லையற்ற அன்பு பூண்டிருந்தார். தாம் உயிராக வைத்திருந்த திருநீலகண்டத்தின் பெயரைச் சொல்லி ஆணையிட்டார்’ என்று இவர்கள் பொருள் கூறுகிறார்கள். இவ்வாறு பொருள் கொள்வது தவறானதுமட்டு மன்று, திருநீலகண்டர் புராணத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்துவிடும் என்பதையும் இவர்கள் அறிதல் வேண்டும். இப்பாடலுக்கு முன்னர்க் காணப்படும் அளவு இலா மரபின்’ என்ற பாடலும், அவர் தங்கண் மனைவியாரும் என்று தொடங்கும் பாடலும் ஆன தம் கேள்வர் என்று தொடங்கும் அடுத்த பாடலும் ஒரளவு உண்மையிலேயே குழப்பம் தருகின்ற பாடல்கள்தாம். பொறுமையாகச் சிந்தித்து, கொண்டு