பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை துறந்தார் 343 கூட்டுச் செய்தாலொழிய நேரிய பொருள் காண்பது அரிதாகும். . தில்லை வேட்கோவர் தங்கள் மரபுக்கு ஏற்பத் திருவோடு முதலியவற்றைச் செய்து அவற்றைச் சிவனடியாருக்கு ஏனைய பரிசுகளோடு வழங்கி மகிழ்ந்து வாழும் அந்நாட்களில் ஒரு முறை தம்முடைய இளமை காரணமாக மகளிர் நலம் துய்க்கும் இயல்பில் தம்முடைய தகுதிக்குப் பொருந்தாத நிலையில் ஒரு ப்ரத்தைபால் தொடர்பு கொண்டார். அளவு இலா மரபின் வாழ்க்கை மண்கலம் அமுதுக்கு ஆக்கி, வளர்இளந் திங்கள் கண்ணி மன்றுஉளர் அடியார்க்கு, என்றும் உளம் மகிழ் சிறப்பின் மல்க ஒடு அளித்து ஒழுகும் நாளில் இளமை மீதுஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார். - (பெ. பு-362) இவர் இவ்வாறு செய்வதற்கு, மனைவியின் உடல் நலம் சரியில்லை என்று சொல்ல முடியாதபடி அவர் மனைவி அருந்ததிக் கற்பின் மிக்கவராய் இருந்தார். இதனை அவர்தங்கண் மனைவியாரும் அருந்ததிக் கற்பின் மிக்கார் என்ற அடுத்த பாடல் தொடரால் அறியலாம். இந்தத் தொடரை முழு வாக்கியமாகக்