பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 : சேக்கிழார் தந்த செல்வம் கொண்டு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். பாடலின் பின் மூன்று அடிகளும் இந்த அடியோடு சேர்த்துப் பொருள் செய்யப்படக் கூடாது. இவற்றிற்குத் தலைவராய் இருப்பவர் திருநீல கண்டரே யாம் என்ற கருத்தோடு பாடலைக் கவனித்தால் திருநீலகண்டருக்கு இப்பெயர் வந்த காரணம், திருநீலகண்டம் என்ற பெயரில் அவர் ஈடுபாடு கொண்ட காரணம் ஆகியவற்றிற்கு விடை கிடைக்கும். இப்பொழுது பாடலைப் பார்க்கலாம். இறைவனின் வயிற்றில் அண்ட சராசரங்கள் அனைத்தும் இருத்தலின் அவன் உண்ட நஞ்சு உள்ளே சென்றிருப்பின் இந்தப் புவனங்களை அழித்திருக்கும். அப்படி அந்த நஞ்சு அழிவு வேலையைச் செய்யாமல், அதாவது நஞ்சை உள்ளே செல்லவிடாமல், தடைசெய்தது இறைவனுடைய கழுத்தல்லவா? எனவே, தில்லை வேட்கோவர் இறைவனுடைய நீலகண்டம் செய்த இந்த மாபெரும் உபகாரத்தை நினைந்து, அந்த இறைவன் கண்டத்தை திருநீலகண்டம் என்றே சொல்லும் பழக்கமுடைய வராய் இருந்தார். இதனை அடுத்து வரும் பாடல் ஆன தம் கேள்வர் என்று தொடங்கும் பாடலாகும். இப் பாடலின் தொடக்கத்தில் உள்ள ஆன' என்ற பெயரெச்சம் இதற்கு முன் பாடலில் உள்ள, திருநீல கண்டம் என்பார் என்ற சொல்லோடு இணைந்து,