பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை துறந்தார் 345 எப்பொழுதும் திருநீலகண்டம் திருநீலகண்டம்’ என்று சொல்பவர் ஆன தம்கேள்வர் ஒரு பரத்தை பால் அணைந்து நண்ண’ என்று முடிவு கொள்ளும். இப்பொழுது மூன்று பாடல்களையும் ஒன்றாக இணைத்துப் பொருள் கொள்ளும் முறையைக் காண்போம். அருந்ததிக் கற்பின் மிக்கார் (பெபு-863) எழுவாய்; எளியரானவரும் (பெபு-362) திருநீல கண்டம் என்பாரும் (பெயு-363) ஆன தம் கேள்வர் (பெ.பு-364) பரத்தைபால் அணைந்து நண்ண (பெயு-364) உடன் உறைவு இசையார் ஆனார் (பெ.பு-364 பயனிலை. திருநீலகண்டம் என்பாரான தம் கேள்வர் என்று கூறியதால், திருநீலகண்டத்தை ஓயாது ஜெபம் செய்பவரும், அதன்பால் ஈடுபாடு கொண்டவரும் தில்லை வேட்கோவரே தவிர, அவருடைய மனைவியார் அல்லர் என்பதை நன்கு விளங்கிக் கொள்ள முடியும். - - - - - - - ஆணை வைப்பது பற்றி இத்தமிழர்கள் கொண்டிருந்த ஒரு கருத்தைப் புரிந்துகொள்வது நலம். ஆணை வைப்பது இரு வகைப்படும். ஒருவன் தன் கருத்தை வெளியிடும்பொழுது, அக்கருத்துக்கு அரண் செய்யும் முறையில் தான் எதனை விரும்புகிறானோ அதன்மேல் ஆணையிடுதல் ஒரு முறை மற்றொரு வரை, ஒரு கருத்தை ஏற்குமாறு செய்வதற்கு