பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 சேக்கிழார் தந்த செல்வம் அவருக்குப் பிடித்தமான ஒன்றின்மேல் ஆணை வைப்பது இந்நாட்டு மரபாகும். இம் முறையைத் தான் சேக்கிழார் கையாள்கிறார். ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கம்பநாடன் இந்த ஆணை வைக்கும் முறையைப் பலவகையில் சொல்லிக் காட்டுகிறான். கைகேயியின் மனத்தில் உள்ள குறையைப் போக்க வேண்டும் என்று நினைத்த தசரதன், - - --ஒன்றும் லோபேன் வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான் ‘. . . (கம்ப-50) என்ற பாடலில் தசரதன் தனக்கு முக்கியமாக உள்ள இராமன்மேல் ஆணை இடுகிறான். இது பேசுபவர்கள் எதனைப் பெரிதென மதிக்கிறார்களோ அதன் பெயரில் ஆணை இடும் மரபைக் காட்டும். - இதனை அடுத்தபடியாக, பேசப்படுபவருக்கு எது முக்கியமோ அதன்மேல் ஆணை இடுகின்ற மரபும் தமிழகத்தில் உண்டு. இதே தசரதன் கைகேயியைப் பார்த்து, மறைக்காமல் உன் மனத்தில் உள்ளதைஇங்கு நடந்ததைச் சொல்வாயாக, என்மேல் ஆணை! என்ற கருத்தில், டபுணர்த்த வஞ்சம் உண்டோ? உன்நிலைசொல் எனது ஆணை உண்மைlஎன்றான்." ... " ... . . " ' ' . . . . (கம்ப-1512)