பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை துறந்தார் 347 என்ற இப்பாடலில் தசரதன் தன்மேல் ஆணை வைப்பதன் அடிப்படை என்ன?, ஒரு மனைவிக்குக் கணவன்தான் அனைத்தும் என்று அந்நாளைய கருத்தின்படி தன்மீது ஆணை வைத்துவிட்டால் கைகேயி பயந்து உண்மை கூறிவிடுவாள் என்று தசரதன் நம்பினான். பேசப்படுபவர்கட்கு எது முக்கியமோ அதன்மீது ஆணை வைப்பது அந்நாளில் உண்டு என்பதை இப்பாடல் அறிவிக்கும்.

  • , இதே கருத்தில்தான் GalLGarat ೧೯೧೯೮೧uTಗೆ பேசுகிறார். திருநீலகண்டம் என்பாரான தம் கணவரை ஒன்றைச் செய்யுமாறு வற்புறுத்தற்கு

அம்மையார் மேற்கொண்ட வழிதான் ஆணை இடும் வழி. "ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம் பேதியா ஆணை கேட்ட பெரியவர் ·赞罗 என்ற சேக்கிழாரின் பாடலடிகள் இக்கருத்தையே வலியுறுத்தும். நீலகண்டத்திடத்துத் தாம் கொண்ட ஆர்வத்தை அம்மையார் வைத்த ஆணை பேதித்து விட்டது எனலாம். திருநீலகண்டம் என்று எப்போதும் தியானித்துச் சொல்பவர் அந்த அம்மையாரே என்று சிலர் பொருள் கூறுவது பொருத்தமற்றது என்பதை இதன் மூலம் அறியலாம்.