பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348 🞸 சேக்கிழார் தந்த செல்வம்


சேக்கிழார் பாட வந்தது வேட்கோவர் வரலாறேயாகும். வரலாற்றில் வரும் பெருமிதச் செய்திகள் வரலாற்று தலைவரையே மையமாகக் கொள்வதே சிறப்பு. பாண்டங்கள் உதவுதல் வேட்கோவர் செய்த புறப்பணி. அப்பணியோடு இணைந்திடும் வகையில், திருநீலகண்ட தியானத்தையும் இணைப்பதே சிறப்பு. திருநீலகண்டம் என்று தியானம் செய்வதை அவருடைய மனைவிக்கு ஏற்றாமல், தியானம் செய்யும் செயலையும், இளமை துறந்த செயலையும் வேட்கோவருக்கே ஏற்றுதல்தான் சேக்கிழார் கருத்துக்கு அரண் செய்வதாகும்.