பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 25 தொண்டின் மதிப்பையே குறைக்க முற்படுவர். ஒரு சிவபக்தர் சிவன் அடியார்களுக்குச் சோறிடுதல் அவருடைய கடமைகளுள் ஒன்றாதலால், இங்குத் தொண்டு என்று பேசுவதற்கு என்ன இருக்கிறது என்ற வினாத் தோன்றும். அத்தகைய நிலையில் இந்த வினாவிற்குச் சேக்கிழார் எங்காவது விடை கூறி யிருக்கிறாரா என்று காண்பது மிக அவசியமாகும். சோறிடுதலையே தம் வாழ்நாளில் பெரிய குறிக் கோளாகக் கொண்டிருந்த இளையான்குடி மாறனார் புராணத்தில் வரும் ஒரு பாடலில் இந்த வினாவிற்குச் சேக்கிழார் மிக நுணுக்கமான முறையில் விடை கூறியிருப்பதை ஆழ்ந்து சிந்தித்தால் அறிந்துகொள்ள முடியும். அப்பாடல் வருமாறு: ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர் என்பது ஓர் தன்மையால் நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன் கூர வந்து எதிர்கொண்டு கைகள் குவித்து நின்றுசெ விப்புலத்து ஈரம் மென் மதுரப்ப தம்பரிவு - எய்தமுன் உரை செய்தபின் (பெபு - 442)