பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப்போவார். தீக் குளித்தது ஏன்? 351 சிவத்தொண்டைச் செய்ய முற்பட்ட இவர், திருக்கோயில் வழிபாட்டுக்குத் தேவையான பேரிகைத்தோல், வீணை, யாழ் முதலியவற்றுக்குரிய நரம்புகள், கோரோசனை முதலியவற்றைத் திரும் பணியில் ஈடுபட்டிருந்தார். என்றாலும் இவருடைய இளமைப் பருவத்தைப் பேசவந்த சேக்கிழார் பெருமான், -வருபிறப்பின் வழிவந்த அறம்புரிகொள் கையராயே அடித்தொண்டின் நெறிநின்றார் (பெ. பு-1057) என்று சொல்வது ஆராய்வதற்குரியது. இப்பெரியார் பெரிதாக அமையப்போகிறதாகலின் அதனைக் குறிப்பால் உணர்த்தவந்த சேக்கிழார் பெருமான், திருக்கோயிலிலே தம் பிறப்புக்கொத்த முறையில் தொண்டு செய்தார் என்று பேசுகிறார். அடியார் களைப்பற்றிப் பேசவருகின்ற பொழுது எவருடைய குலத்தையும் பெரிதாகச் சுட்டிப் பேசுகின்ற வழக்கம் சேக்கிழாருக்கு இல்லை. அப்படியிருந்தும் நந்தனாரை பற்றிப் பேசும்பொழுது எடுத்த எடுப்பிலேயே தம் குலத்துக்குரிய தொண்டைச் செய்துவந்தார் என்று பேசுவது சற்று வியப்பையே விளைவிக்கின்றது. நன்கு சிந்திக்கும்போது சேக்கிழார் வேண்டு மென்றேதான் இந்த அடியைப் பெய்துள்ளார் என அறிய முடிகிறது. .