பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 சேக்கிழார் தந்த செல்வம் புறத்தே நின்று வழிபடுதல் திருக்கோயிலுக்குரிய பொருள்களைத் தருவதுடன் நில்லாமல் ஆங்காங்கே உள்ள கோயில்களுக்குச் சென்று . --திருவாயிற் புறம் நின்று மெய்விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும் அவ்வியல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் . - (பெ. பு-1060) என்கிறார்.ஆசிரியர். எனவே, ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று அதன் புற வாயிலிலே நின்று தம்மை மறந்து பக்தியினால் ஆடுதல் பாடுதல் முதலிய வற்றைச் செய்தார் நந்தனார் என அறிகிறோம். திருக்கோயிலுக்குள் நுழைவற்குத் தமக்குத் தகுதியில்லை எனக் கருதிய காரணத்தினாலேயே நந்தனார் இவ்வாறு செய்தார் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. இங்ங்னம் நடந்துவருகின்ற காலத்தில் ஒருமுறை வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்துள்ள திருப்புன்கூர் என்ற ஊருக்குச் சென்று இறைவனை வழிபட விரும்பினார்; அங்கே போன பிறகு ஏனைய கோயில்களில் இல்லாத ஒரு சூழ்நிலை அவ்வூரில் இருக்கக் கண்டார். மற்றைய ஊர்களைப் பொறுத்தமட்டில் பெரும்பான்மையான கோயில் களில் வாயிற்புறத்தில் நின்றுகூட உள்ளே உள்ள பெருமானை வணங்க முடியும் மிகப் பெரிய