பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 சேக்கிழார் தந்த செல்வம் --திருவாயில் - நேரேகும்பிடவேண்டும் எனநினைந்தார் - (பெயு-1062) இந்நிலையில் இயல்பாக அவர் மேற்கொண்ட வழிபாட்டு முறை முட்டுப்பட்டது. அடியார்க்கு நேர்ந்த முட்டுப்பாட்டை அறிந்த திருப்புன்கூர் மேவிய சிவலோகன் தன்னுடைய எல்லையில்லாத கருணை காரணமாக நந்தியபெருமானைச் சற்று விலகி இருக்க அருள் புரிந்தான் என்று பெரியபுராணம் பேசுகிறது. இந்த ஒரு நிகழ்ச்சி நந்தனாருடைய எல்லையற்ற அன்பின் ஆழத்தையும் இறைவனுடைய கருணையின் ஆழத்தையும் காட்டுவதோடு மற்றொரு பேருண்மை யையும் காட்டி நிற்கின்றது. இதுபற்றிச் சற்று விரிவ்ாகப் பின்னர்க் காண்போம். பிறவி, தடையா-பிறவித் தடையா இங்ங்னம் இறைவன் உறையும் பதிகள் பலவும் சென்று வழிபட்டுவந்த நந்தனார் தில்லையம்பலம் சென்று தூக்கிய திருவடி உடையானைத் துதிக்க வேண்டும் என்ற உணர்வுக்கு ஆட்பட்டார். ஆனால், இவ்வுணர்வைத் தடை செய்தது மற்றொரு நினைவு; அந்நினைவு என்ன என்பதை சேக்கிழார் மிக அழகாகப் பாடிச் செல்கிறார். -