பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? 355 அன்றிரவு கண் துயிலார்; o புலர்ந்ததற்பின் "அங்கெய்த ஒன்றியணைதரு தன்மை உறுகுலத்தோ டிசைவில்லை” என்று "இதுவும் எம்பெருமான் ஏவல் எனப் போக்கொழிவார்; நன்றுமெழும் காதல்மிக "நாளைப் போவேன்” என்பார். (பெ. பு-1066) இதுவரையில் பல ஊருக்கும் சென்று புறத்தே நின்றாவது இறைவனை வழிபட்டுவந்த நந்தனார் தம்முடைய விருப்பம் தடைபடுவதற்குரிய காரணம் ஒன்றையும் காணவில்லை. முதன்முதல்ாக அவருக்கு ஏற்பட்ட தடையைக் கருணை வள்ளலாகிய பெருமான் நீக்கி விட்டான். எனவே, நந்தனார் சிதம்பரம் செல்லும் போது இத்தகைய தடை ஏதேனும் ஏற்பட்டால் இறைவன் கருணையினால் அதனையும் போக்கிக் கொள்ளலாம் என்று நினைந்து போயிருக்க வேண்டும். ஒருவேளை தம்முடைய பிறப்பைப் பற்றிக் கவலைகொள்ளாமல் சிதம்பரம் சென்றிருந்தால் வரலாறு வேறு விதமாக முடிந்திருக்கும்! ஆனால், அத்தகைய ஒரு மனோ நிலை அவருக்கு ஏற்படாமல் புதியதோர் எண்ணம் கிளைத்து விட்டது. | “. அங்கெய்த ஒன்றி யணைதருதன்மை