பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? 357 தொடங்கிவிட்டது. திருப்புன்கூரில் நந்தியை விலகச் செய்ததுபோல் ஏதாவது ஒரு முறையில் கருணை காட்டுவான் என்ற எண்ணம்கூட அவருடய மனத்தில் தோன்றவில்லை. அவரைப் பற்றிக் கொண்டிருந்த சாதிபற்றிய எண்ணம் இவ்வளவு விரைவாகத் தாழ்வு மனப்பான்மையாக (Inferiority Complex) அவருள் பதிந்து விட்டது. மனஇயல்பற்றி அறிந்தோர் இத்தாழ்வு மனப் பான்மைபற்றி நன்கு அறிவர். இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்க்கு உய்கதியே இல்லை எனலாம். அவர்களாக இத்தகைய ஒன்று தம்மைப் பிடித்துள்ளது என்பதை அறிந்து நீக்கினாலொழிய, இதனைப் போக்கவே முடியாது. தாழ்வு மனப் பான்மையில் சிக்குண்டவர் மிகவும் இரங்கத் தக்கவராவர். பிறர் இதனை எடுத்துக்காட்டி, இத்தகைய மனப்பான்மை தேவை இல்லாத ஒன்று என்று எடுத்துக் கூறினாலும் இம் மனப்பான்மை தம்மிடம் உண்டு என்றுகூட இந்நோயுடையார் ஏற்றுக்கொள்வதில்லை. - - - ". . . . அவ்வாறானால் இத்தகைய மனநோய்வயப் பட்டார்க்கு மருந்துதான் யாது? மருத்துவன் யாவன்? நோய்நாடி, நோய்முதல் நாடி, அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் : ' ' ' -- - --> . குறள்-48)