பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 சேக்கிழார் தந்த செல்வம் படுகின்றவனே சிறந்த மருத்துவனாவான். நந்தனார் போன்ற சிறந்த சிவபக்தர்-தவம் பெருக்குஞ் சிலர் ஒருவர் இத்தகைய வேண்டாத நோயால் பிடிக்கப் பட்டால், அதனை யார் நீக்க முடியும்? பிறர் எடுத்துக் கூறியவிடத்து மன அமைதி அடையக் கூடியவர்களா இவர்கள்? அதிலும் நீக்கக் கூடிய ஒன்றால் தாம் பற்றப்பட்டதாக நினைத்திருப்பின் ஒரு வேளை வேறு வழிகளில் முயன்றிருக்கலாம். உடம்புடன் பிறந்த நோயாகவே தம்முடைய சாதியை நினைந்துவிட்டார் நந்தனார். - சாதி என்ற ஒன்று உண்டா? அது மனிதர்களால் படைக்கப்பட்ட ஒன்றுதானே? அதற்காக இத்துணைத் தூரம் கவலைகொள்வது சரியா என்ற ஆராய்ச்சி பயனற்றதாகும். அந்த நாளைய சமுதாயம் இதனை உண்மை என நம்பிற்று. அந்தச் சமுதாயத்தில் தோன்றிவிட்ட பெரியார் - இதனை மெய் என்று முழு மனத்துடன் நம்பிவிட்டார். அந்த நம்பிக்கை சரியா தவறா என்று சிந்திப்பதில் பயனில்லை. சமுதாயத்தின் தவறுதான் என்று கூற வேண்டிய ஒன்றிற்கு, அந்த நம்பிக்கையின் அடிப் படையில் செயல்படுபவரை என்ன செய்ய முடியும்? சாதாரண மக்களின் நம்பிக்கை நம்பிக்கை புடையார் இரு வகைப்படுவர். சாதாரண மக்கள் நம்பிக்கை என்பதைப் புளியம் பழத்தின் ஒடுபோலக் கொண்டிருப்பர். முதல் அடி பட்டவுடன்