பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சேக்கிழார் தந்த செல்வம் நேர வந்தவர் யாவர் ஆயினும் இளையான்குடி மாறனார் யாரை உபசரித்தார் என்ற வினாவிற்கு விடை கூறவந்த சேக்கிழார் புதுமையான ஒரு கருத்தைப் பேசுகிறார். இப் பாடலின் இரண்டாம் அடி நேர வந்தவர் யாவராயினும் என்று மிக விளக்கமாகவே விடை அளிக்கிறது. அதாவது, இளையான்குடிமாறனார் எதிர்ப்பட்டு அவருக்கு முன்னே வந்தவர்கள் யாராக இருப்பினும் அவர்களை வணங்கி இனிமையான சொற்களைப் பேசி, அவர்களை அழைத்துவந்து, அறுவகைச் சுவையுடன் கூடிய உணவிட்டார் என்று பாடல் சொல்கிறது. "யாவராயினும் என்ற தொடர் சிந்தனைக் குரியது. இளையான்குடி மாறனார் காலத்தில் அந்த ஊரில் இருந்தவர்கள் அனைவரும் சைவர்கள் என்றோ சிவனடியார்கள் என்றோ கறுவது பொருத்தமற்றதாகும். ஒரு ഉളTrr என்றிருந்தால் பல வகை மக்களும், பலவகை இனத்தவரும், பல சமயத்தவரும் இருக்கத்ததான் செய்வர். எனவே, நேரவந்தவர் யாவராயினும் என்று சேக்கிழார் சொல்லும்பொழுது, மாறர்தம் எதிரே வந்தவருடைய சாதி, குலம், கோத்திரம், சமயம் என்பவைபற்றிச் சிந்திக்கவே இல்லை என்பதைச் சேக்கிழார் தெளிவுபடுத்துகிறார். யாராக இருந்தாலும் என்ற சொல்லுக்கு இதுவே நேரான பொருளாகும்.