பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? 359 ஒடு பொலபொல வென்று உடைந்து கொட்டிவிடுகிறது. சாதாரண மக்களின் நம்பிக்கையும் இத்தகையதே. நம்பிக்கையின் எதிரான வாதமோ, காரியமோ நடைபெறுவதைக் கண்டவுடன் இவர்கள் நம்பிக்கையும் ஆட்டங் கண்டு வீழ்ந்து விடுகிறது. இறைவனாலும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆனால், அடியார்களின் நம்பிக்கை மிகமிக ஆழமானது. இறைவனாலும் அசைக்க முடியாத சிறப்புடையது. அவர்கள் எதிராக இறைவன் நேரே வந்து அவர்கள் கொண்ட நம்பிக்கை தவறானது என்று எடுத்துக்காட்டினாலும் அவர்கள் தம் நம்பிக்கையை விடுவதில்லை. இதனைப் பிடிவாதம் என்று தவறுதலாக நினைந்துவிட வேண்டா, தவறு என்று தெரிந்திருந்தும் வேறு காரணங்கள்பற்றி ஒன்றை விட மறுப்பது பிடிவாதம். ஆனால், தக்க காரணங்களுடன் தாங்கள் மேற்கொண்ட கொள்கை யிலிருந்து பிரிய மறுப்பது மன உறைப்பு என்று கூறப் பெறும் அடியார்கள் கொள்கை என மேற்கொள்வது அனைத்தும் நம்பிக்கையிலிருந்து பிறப்பவையே ஆகும். ஆதலால்தான் அவர்கள் கொண்ட கொள்கையின்மாட்டு அத்துணை முனைப்புடன் நிற்கின்றனர். .* * - ஏயர்கோன் கலிக்காமர் நம்பியாரூராகிய சுந்தரமூர்த்தியிடம் வெறுப்புக் கொண்டு அவரைக் காணவும் மறுக்கிறார். ஆனால், அவருக்கு வந்த