பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 சேக்கிழார் தந்த செல்வம் சூலை நோயை நம்பியாரூரர் வந்துதான் தீர்க்கமுடியும் என இறைவன் கனவிடைக் கூறியதற்கு ஏயர்கோன் இறுக்கின்ற விடை வியப்பையும் அச்சத்தையும் விளைக்கிறது. "எம்பிரான்! எந்தை தந்தை தந்தைஎம் கூட்டம் எல்லாம் தம்பிரான் நீரே என்று வழிவழிச் சார்ந்து வாழும் இம்பளின் மிக்க வாழ்க்கை என்னைநின்று ஈரும் துலை வம்பு என ஆண்டு கொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து? "மற்றுஅவன் தீர்க்கில் தீராது - - ஒழிந்து எனை வருத்தல் நன்றால்: 55 (பெ. பு-355 & 52) "உயிர் போக வாட்டி வருத்துஞ் சூலையை நம்பியாரூரன் வந்து தீர்ப்பதினும் அது தீராது இருத்தலே நன்று” என்று பகரும் நெஞ்சுரம்தான் அவர்களை அடியார்களாக ஆக்குகிறது. அதுவும் வந்து கூறுபவன் சாதாரண் மனிதன் அல்லன்! இறைவனே கூறுவதானாலும் தம் கொள்கையினின்று பிறழக்கூடாது என்று நினைப்பவர்கள் இவ் வடியார்கள். இத்தகைய ஒரு உறுதிப்பாடு சரியா தவறா என்றது. இங்கு வினாவன்று. இதனைத் தவறு