பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? 381 என்று கூறுகிறவர்கள் பெருநிலையைப் பற்றி அறியாதவர்கள். அடியார்கள் இத்தகைய நெஞ்சுரம் கொண்டிருந்தமை யால்தான் செயற்கரிய செய்ய முடிந்தது. உலகத்தில் மாபெருங் காரியங்களைச் சாதித்தவர்கள் அனைவருமே இத்தகைய உரம் வாய்ந்தவர்கள் தாம். இதனை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் அடியார்களையும் மற்றப் பெரியார்களையும் பிடிவாத குணமுடையார்’ என்று கூறுவர். அதுபற்றி அடியார்கள் என்றுமே கவலைப்படுவதில்லை. ஆதனூரில் அடக்க முடிந்தது : தில்லை எல்லையில் முடியவில்லை இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு நந்தனாரின் மன நிலையையும் செயல்களையும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். சிதம்பரத்திற்குப் போகலாமா வேண்டாவா என்று பல நாள் சிந்தனையிலேயே கழித்துவிட்ட நந்தனார் ஒரு வகையாக மனத்தில் திடங்கொண்டு சிதம்பரத்திற்கு வந்தே விட்டார். வந்ததும் அவருடைய பிரச்சினை தீர்ந்த பாடில்லை. தில்லையின் எல்லையை அடைந்த பெரியார் அங்கேயே வணங்கி எழுந்தார். ஊர் முழுவதும் வேள்வி செய்வதால் உண்டாகிய புகையும் மடங்களின் நெருக்கமும் கண்டார். கண்டவுடன் நினைவு தோன்றிற்று: 'அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்’ என்கிறார் ஆசிரியர்.