பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? 363 என்ற எண்ணம் ஒருவகையாக வெற்றி பெற்று விட்டது. இந்த எண்ணம் வலுப்பெற்றுத் தில்லைக்குப் புறப்பட்டவுடனேயே நந்தனாரின் மனத்திலிருந்த சாதிபற்றிய எண்ணம் மறைந்திருக்க வேண்டும். சாதி பற்றிய எண்ணத்தை வென்றுதானே தில்லைக்குப் புறப்பட்டார் எந்த நேரத்தில் புறப்பட முடிவு செய்தாரோ அந்த நேரத்திலேயே சாதியின் இழிவு பற்றிய துயரம் மறைந்திருக்கவேண்டும். அப்படித்தான் நாமும் எதிர்பார்ப்போம். ஆனால், நடந்தது என்னவோ வேறாக இருந்துவிட்டது. தில்லையின் எல்லையை அடைந்தவுடன் நீண்ட காலமாக அவருடைய மனத்தை நையவைத்து வேறு எண்ணமே புகவிடாமல் தனியாக நின்ற ஒரு பேராசை-தில்லை செல்ல வேண்டுமென்ற பேராசை இப்பொழுது முற்றுப்பெற்றுவிட்டது. எனவே, அவருடைய மனத்தில் தேவையில்லாத மற்றோர் எண்ணம் குடிபுகத் தொடங்கிவிட்டது. ஆதனூரில் இருக்கின்றவரையில் அடிமனத்தின் ஆழத்தில் தங்கியிருந்து ஒரோவழி வெளிப்பட்டு, அவருக்குத் துயரத்தைத் தந்த சாதிபற்றிய எண்ணம் இப்பொழுது தலைதூக்கிவிட்டது. முன்னமே அவருக்கிருந்த கவலைதானே இது? அப்படியிருக்க இப்பொழுது புதிதாக என்ன நேர்ந்துவிட்டது என்று நாம் ஐயுறலாம். உண்மை என்னவெனில், முன்னரே இந்த எண்ணம் இருப்பினும் இதனை எதிர்த்துப் போராடுகின்ற ஒர் எண்ணம்-அஃதாவது தில்லை