பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? 365 ஒப்பு அரிதாய் வளர்ந்துஓங்க உள்உருகிக் கைதொழுதே செப்பு அரிய திருஎல்லை வலம்கொண்டு செல்கின்றார். (பெ. பு-1070) எல்லையிலேயே தோன்றிய சாதிபற்றிய இவ்வச்சம் ஊருக்குள் போனவுடன் பன்மடங்காகப் பெருகிவிட்டதை அறிகின்றோம். 'இப்பரிசாயிருக்க எனக்கு எய்தலரிது’ என்று அஞ்சினார் என்று அறிகிறோம். இந்த எண்ணம் அவரை முற்றிலும் ஆட்கொண்டுவிட்ட சூழ்நிலையில் பல நாட்கள் அங்குத் தங்கிப் பொழுதைக் கழிக்கின்றார். ஒவ்வொரு நாளும் உறங்கப் போகும் பொழுது, எல்லையற்ற சிவ பக்தியுடையவராகிய அவர் இறைவனுடைய திருவடிகளையே நினைந்து உறங்கப் போயிருப்பார் என்று நாம் கருதுவோம். ஆனால், உண்மையில் நிகழ்ந்தது அதுவன்று எனச் சேக்கிழார் கூறுகிறார். இன்னல்தரும் இழிபிறவி . இது தடை என்றே துயில்வார்’ - - (பெ. பு-1072) என்று கவிஞர் பாடுகிறார். என்றே துயில்வார் என்ற சொற்கள் இங்கு ஆராயத் தக்கன. இந்த ஓர் எண்ணத்தைத் தவிர அவருடைய மனத்தில் எண்ணம் வேறில்லை என்பதை நமக்கு