பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 சேக்கிழார் தந்த செல்வம் அறிவுறுத்துவதற்குப்போலும் 'என்றே என்ற தேற்றேகாரம் கெர்டுத்துப் பேசுகிறார். எனவே, ஆதனூரில் இருந்த இந்தத் தாழ்வுமனப்பான்மை, தில்லைக்கு வந்த பின் விஸ்வரூபம் எடுத்து நந்தனாரை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்டது. இறைவனைப்பற்றிய நினைவைக்கூட அமுக்கி, சாதிபற்றிய ᏧᏠᏚᎧaᎥ6ᏡᎠᏮy அடியாரை முழுவதும் ஆட்படுத்திவிட்டது. இத்தகைய ஒரு நிலையில் அந்த நடராஜப் பெருமானே வந்து உன் சாதிபற்றிக் கவலை வேண்டா, நீ கோயிலுக்கு வா’ என்று அருளி யிருப்பினும் நெஞ்சுரம் உடைய அடியாராகிய நந்தனார் அதைப் பொருட்படுத்தி யிருக்கமாட்டார். இம் மனநிலைக்குக் காரணமான பிறவி போனால் ஒழிய நந்தனார் அமைதியாக ஆண்டவனை வழி பட்டிருக்க முடியாது. - இறைவன் ஆட்கொள்ள வழி இரண்டு இந்நிலையில் இரண்டு எண்ணங்கள். நம் மனத்தில் எழுகின்றன. முதலாவது எண்ணம், துயருடைய பிறவி போய் நீங்குமாறு இறப்பினைத் தந்து இறைவன் அவரை ஆட்கொண்டிருக்கலாம். இரண்டாவதாக, திருப்புன்கூரில் நந்தியை விலகச் செய்ததுபோலவும், திருவாலங்காட்டில் ஞான சம்பந்தப்பெருமானுக்கு ஊரின் வெளியே வந்து