பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? - 367 காட்சி தந்ததுபோலவும் இறைவன் காட்சி தந்திருக்கலாம். இவற்றுள் முதலாவதாக உள்ளதைச் சற்று ஆராயலாம். நந்தனாருக்கு இறப்பைத் தந்து வீடு பேறு அருளியிருப்பின் இறைவனுடைய கருணைக்கே களங்கம் ஏற்பட்டிருக்கும். இந்த அடியார் வேண்டியது யாது? இறைவனுடைய திருவடியை அடையவேண்டுமென்று என்றுமே அவர் விரும்பினதாகத் தெரியவில்லை அதன் எதிராக இந்த உடலோடு அவனுடைய திருவடியைக் கும்பிட வேண்டுமென்றுதானே விரும்பினார்: அடியார்கள் யார் என்பதைக் கூறவந்த சேக்கிழார், "கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” (பெபு-143) என்று கூறுவதை இங்கு மனத்துட் கொண்டால், இறைவன் ஏன் இந்த முடிவெடுத்தான் என்பதை அறிந்துகொள்ள முடியும். எனவே, அவர் விருப்பத்தின் எதிராக உடம்பைக் கழித்து உயிருக்கு வீடுபேறு அருளுவது கருணைக் கடலாகிய இறைவனுக்கு உகந்ததன்று. - * . வேண்டிய வேண்டியாங்கு இனி இரண்டாவதாக உள்ள காரணத்தையும் சிந்திக்கலாம். வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் என்று பாடிச் சென்றார் திருநாவுக்கரசர். அப்படியானால், நந்தனார் விரும்பியது யாது? அவர் வேண்டுவதைத் தருவதுதானே முறை? திருப்புன்கூர்