பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 சேக்கிழார் தந்த செல்வம் சென்ற நந்தனார் கோயிலுக்கு உள்ளே செல்வதற்குத் தடையாகத் தம்முடைய பிறவி இருக்கின்றது என்று நினைத்ததாகத் தெரியவில்லை. சீர்ஏறும் இசைபாடித் திருத்தொண்டர் திருவாயில் நேரேகும் பிடவேண்டும் எனநினைந்தார்க்கு, அதுநேர்வார் கார்ஏறும் எயிற்புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு போஏற்றை விலங்கஅருள் புரிந்தருளிப் புலப்படுத்தார். (பெ. பு-1062) 'இறைவனைத் திருவாயில் நேரே கும்பிட வேண்டும்’ என்றுமட்டுமே நந்தனார் நினைந்தார். அந்த நினைவைச் செயல்படுத்தினவன் இறைவன். நேரே கும்பிடுவதற்குத் தடையாயிருந்த நந்தியம் பெருமானை விலகியிருக்க அருள் செய்தான். ஆனால், தில்லைக்கு வந்த நந்தனார் இறைவனை நேரே கும்பிடவேண்டும் அல்லது வீடுபேற்றைப் பெறவேண்டும் என்று நினைந்து இருப்பாரேயானால், இறைவன் அதற்கு அருள் செய்திருப்பான். அவ்வாறு இல்லாமல் கோயிலுக்குள் சென்று வழிபட வேண்டும் அதற்குத் தடையாகத் தம்முடைய பிறவி உள்ளது என்று துயரத்தில் ஆழ்ந்து, இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்று நினைந்தார் ஆதலால், அந்தப் பிறவியாகிய தடையைப் போக்க முனைந்தான் பெருமான்.