பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 27 இது இயலுமா? தம்மோடு தொடர்பில்லாது புறச் சமயத்தார்களைக்கூட அவர்கள் іщштrї என்று பார்க்காமல் மாறர் உணவிட்டார் என்றுதான் இப்பாடல் கூறுகிறது. மனித இயல்புக்கு அப்பாற்பட்டதாகும் இச்செயல். ஒரு மனிதன் தன்முன் இருப்பவர்களைப் பகை, நொதுமலர், நண்பர் என்ற மூன்று வகையுள் அடக்கிவிட முடியும். நொதுமலர் என்பவர் முன்பின் தெரியாதவர் ஆவர். இம் மூவகையினரிடமும் ஒருவர் சமமான பார்வை பார்க்கிறார் என்றால், அவர் மிக உயர்ந்த ஞானியாக இருத்தல் வேண்டும். அத்தகைய நிலை வரும்பொழுது இம் மூவகையினரிடமும் அன்போ, வெறுப்போ காட்டாத சமதிருஷ்டி Զ-նմ)Լ-ւԼ16A1յ T35 . ஒருவர் இருந்தால் ஒழிய அனைவரையும் ஒன்றாகக் கருத (Լքւգ-եւյո5յ. இளையான்குடி மாறர் இந்த வகையிலும் சேர மாட்டார். ஏனென்றால், தெருவில் யார் வந்தாலும் அவர்களிடம் எல்லையில்லாத அன்பு காட்டி உபசரித்தார் என்று சேக்கிழார் பேசுகிறார். சாதாரண மனித நிலையில் அனைவரிடமும் விருப்பு, வெறுப்புக் காட்டாமல் இருத்தல் இயலாது. ஒரு சிலரிடமாவது வெறுப்புக் காட்ட நேரிடலாம். இப்படிப்பட்டவர்கள் கூட முன்பின் தெரியாத நொதுமலரிடம் அன்பு காட்ட முடியாது. அப்படியென்றால் மாறர் எந்த வகையைச் சேர்ந்தவர் என்ற வினாப் பிறக்கிறது.