பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? 369 'இழிபிறவி என்று நந்தனார் குறிப்பிடுவது பொதுவாகக் கூறப்படும் மானுடப் பிறவியை அன்று. அவர் குறிப்பது அரிசன குலத்தில் தோன்றிய தம்முடைய உடம்பைத்தான் என்பதை அறிதல் வேண்டும். முன்னரே கூறியபடி பிறவியைப் போக்கி வீடுபேற்றைத் தந்தால் நந்தனாருடைய விருப்பம் முற்றிலும் நிறைவேறியதாகாது. அவருடைய தாழ்வு மனப்பான்மைக்கு ஒரே ஒரு மருந்துதான் உண்டு. இந்தப் பிறவியிலேயே அவரால் இழிவான தென்று கருதப்பட்ட இந்த உடம்பை மாற்றி அவர் உயர் பிறப்பு என்று கருதும் வேறோர் உடம்பு தருவது தவிர வேறு வழி இல்லை. அடியாரின் நோயை நாடிய இறைவன், பின்னர் அந்த நோயின் முதலையும் நாடி, அடுத்து அந்நோய் தணிக்கும் வாய் நாடி, வாய்ப்பான ஒரு வழியை மேற்கொள்ளுகிறான். "இப் பிறவி போய்நீங்க எளியினிடை நீ மூழ்கி முப்புரி நூல் மார்பருடன் முன் அணைவாய்” (பெ. பு-1073) என்று கூறிப்போனான். அந்தணர் செயல் : இறைவன் கட்டளை அடியார் மன நோய்க்குரிய முறையில் மருத்துவம் செய்த வைத்தியநாதன், இத்தகைய ஒர்