பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப்போவார் தீக் குளித்தது ஏன்? 371 சாதியால் அரிசனக் குலத்தவராகிய நந்தனை மனமார ‘ஐயரே என்று அழைத்துவிட்டமையால் நந்தனாருடைய குலம்பற்றி அவர்கள் கவலைப்பட வில்லை என்பதை அறிவித்துவிட்டார்கள். அப்படி இருந்தும் அடுத்த அடியில், அவர் முழுகுவதற்குத் தீ அமைத்துத் தர இருக்கின்றார்கள் என்றால், இவை இரண்டும் எவ்வளவு பொருத்தமற்ற கூற்றுகள். இதிலுள்ள பொருத்தமின்மையை நன்கு அறிந்த தில்லை வாழ் அந்தணர் மிக்க அச்சத்தோடு தம் கருத்தை வெளியிடுகின்றார்கள். ஐயரே, உமக்கு அழல் அமைத்துத் தரவேண்டுமென்றோ அதில் தாங்கள் மூழ்கி எழவேண்டுமென்றோ நாங்கள் கனவிலும் கருதமாட்டோம். ஆனால், பின்னர் ஏன் வந்தோம் என்றால், அது, நீங்களும் நாங்களும் மீற முடியாத இறைவனுடைய கட்டளையாகும் என்று சொல்பவர்கள்போல், 'ஐயரே அம்பலவர் அருளால் இங்கு அணைந்தோம் வெய்யஅழல் அமைத்து உமக்குத் தரவேண்டி. ’ என்று பேசுகிறார்கள். தம்முடைய விருப்பு வெறுப்புகளை அப்பால் ஒதுக்கிவைத்துவிட்டுத் தலைவனின் இறைவன்) கட்டளையை நிறைவேற்றும் அடிமைகளாக அப்பெருமக்கள் காட்சியளிக்கின்றனர். . இந்நிலையில் நந்தனாருடைய மனநிலையைச் சற்றுக் காணவேண்டும். அவர்கள் அவ்வாறு கூறியவுடன் நந்தன் கூறிய சொற்கள், நான் உய்ந்தேன்’ என்பது ஆகும். எவ்வளவு தூரம்