பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 சேக்கிழார் தந்த செல்வம் அவருடைய மனத்தில் சாதி பற்றிய துயரம் இருந்திருந்தால் இத்தகைய சொற்கள் வெளிப் பட்டிருக்கும்? ஆடவல்ல பெருமான் தம்முடைய கனவில் வந்து பேசியதுகூட அவ்வடியாருக்குப் பெரிதாகப் படவில்லை. ஆனால், 'நெருப்பு அமைத்துத் தரப்போகின்றோம் என்று தில்லைவாழ் அந்தணர்கள் கூறியவுடன் நான் உய்ந்தேன்’ என்று கூறுவாரேயானால், எவ்வளவு ஆழமாக அவருடைய மனத்துயர் இருந்தது என்பதையும் அத்துயர் 'நெருப்பில் மூழ்குதல்’ என்ற இரண்டு சொற்களால் ஆறிவிட்டது என்பதையும் அறிய முடிகிறது. யாரால் அறியமுடியும்? வரலாற்றின் இந்த நுணுக்கத்தையும், சேக்கிழாரின் தெய்வப் புலமையையும், அடியார்களுடைய நெஞ்சுரத்தையும், மனித மனத்தில் தோன்றும் தாழ்வு மனப்பான்மைபோன்ற நீக்குவதற்கரிய நோய்களையும் நன்கு அறிந்த பெருமக்களே திருநாளைப்போவார் வரலாற்றில் அப்பெருமகன் தீக்குளிப்பதற்கு நேர்ந்த காரணத்தையும் செம்மையாக அறிய முடியும் இன்று சமுதாயத்தில் காணப்படும் குறைவு நிறைவு களை வைத்துக்கொண்டு அன்றைய சமுதாயத்திலும் இத்தகைய ஒரு கொடுமை நிகழ்ந்தது என்று பேசுவது. சேக்கிழாரையோ நந்தனாரையோ அடியார்களையோ அறியாதவர்கள் செயலேயாகும். @@ó@@