பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. இயற் பகையார் மூன்றில் இரண்டு : இரண்டில் ஒன்று சராசரி மக்களால் தமக்கு முடியாத ஒன்று என்றும், ஒரளவு நம்பமுடியாதது என்றும் கூறப் படுகின்ற நிகழ்ச்சிகளே பெரியபுராண அடியார்கள் வாழ்க்கையில் அதிகம் காணப்படும். ஓரளவு அறிவு வளர்ச்சியும் உணர்வு வளர்ச்சியும் அடைந்தவர்கள் Ε Ιόι) நாயன்மார்கள் வரலாறுகளை, இது இயல்பானதே என்ற கருத்தில் ஏற்றுக்கொள்ள முடியும். அத்தகையவர்களும்கூட ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் கொடுமையானவை என்றும் கூறக்கூடிய இரண்டு வரலாறுகள் பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ளன. அவை சிறுத்தொண்டர், இயற்பகையார் ஆகிய இருவருடைய வரலாறுகளே ஆகும். இவற்றுள் சிறுத்தொண்டர் வரலாறு சராசரி மனிதரால் பின்பற்ற முடியாத நிகழ்ச்சிகளைக் கொண்டது என்றுதான் பலரும் கூறுவர். முற்றத்துறந்த பட்டினத்து அடிகள் கூடச் சிறுத்தொண்டரைப் போலத் தாம் செய்ய முடியாது என்றுதான் கூறுகிறார். தியாகத்தில் உச்ச கட்டம் என்று சொல்லப்படும் சிறுத்தொண்டர், கண்ணப்பர் திருநீலகண்டர் ஆகிய மூவர் வரலாறு: