பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 சேக்கிழார் தந்த செல்வம் போற்றுகின்றவர்கள்கூட ஏனோ இயற்பகையார் வரலாற்றை எடுத்துப் பேசுவதே இல்லை. ஈதல் புகார் நகரில், வணிகர், குலத்தில் பெரும் செல்வத்துடன் வாழ்ந்தவர் ஒருவர். என்ன காரணத்தாலோ அவரது இயற்பெயரை இவ் உலகத்தார் மறந்துவிட்டனர். சிவனடியார்கள் எது வேண்டும் எனக் கேட்டாலும் அதனை மறுக்காது கொடுக்கும் வழக்கம் உடையவர். தருதல் கொடுத்தல் என்பவை சிந்தித்து, ஆராய்ந்து, செய்யலாமா, வேண்டாமா என்ற சிந்தனைக்குப் பிறகே பலரிடம் நிகழும் செயலாகும். ஆராயாது தருதலைப் பிற் காலத்தில் இந்நாட்டவர் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அதனாலேயே ஆற்றில் போட்டாலும் அளந்து போடு', 'பாத்திரமறிந்து பிச்சை இடு’ என்பன போன்ற எச்சரிக்கைகள் பழமொழி என்ற பெயரில் வழங்கத் தொடங்கின. ஈதல் இயல்பாக நிகழ வேண்டும் என்று கூறினார் வள்ளுவர். கொடுப்பதினால் புண்ணியம் கிடைக்கும், மறுமையில் இன்பம் கிடைக்கும் என்ற நினைவோடு கொடுப்பவர்கள் மிகப் பழங்காலத்திலும் இருந்திருப்பார்கள்போலும். அதையும் கடந்து, எதிரே நிற்பவர் யார்? அவர் கேட்கும் பொருள் அவருக்குத் தேவைதானா? அப்பொருளைத் தருவதால் நம்நிலை என்னவாகும்?