பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பகையார் . 375 என்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுப் பின்னர்க் கொடுப்பதை ஈதல் என்று நம்மவர் கொள்ளவில்லை. ஒரு பொருள் கேட்கப்பட்ட பொழுது அதே வினாடியில் அதைத் தருதல்தான் உயர்ந்த வள்ளன்மை என்று இந்நாட்டவர் கருதினர். வேள் பாரி முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்தமையின், பரந்து ஓங்கு சிறப்பின் பாரி ஆனான். இத்துணை விரிவாக இதுபற்றி இங்கே பேசப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு. கொடுப்பவர் களில் இத்தகைய மனநிலை உடையவர்களும் உண்டு என்பதை அறிந்து கொண்டால், இயற்பகையாரை அறிந்துகொள்ளுதல் ஒரளவு எளிதாக இருக்கும். இவற்றையெல்லாம் மனத்துட் கொண்ட சேக்கிழார் புகாரில் வாழ்ந்த வணிகள் ஒருவன் சிவனடியாருக்கு எதையும் கொடுக்கும் இயல்பைக் கூறும்பொழுதே தேவையில்லாமல் உலகியல் பகையார் என்ற சொற்களைப் பெய்கின்றார். 鐵鑫 மிக்கசீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே இக்கடல்படி நிகழமுன் கொடுக்கும் இயல்பின் நின்றவர்; உலகுஇயற் பகையார்.” . (பெ. பு-405) (கடல் படி : கடல் சூழ்ந்த உலகம் இந்த இரண்டு அடிகளில், மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் என்ற சொற்கள் ஒன்றுக் கொன்று